என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சீரமைக்க கோரிக்கை"
- சவுந்தரவல்லி அம்பாள் உடனுறை சோமேஸ்வரர் மற்றும் லட்சுமி நாராயண பெருமாள் கோவில்கள் அமைந்துள்ளன.
- சேந்தமங்கலம் சிவாலயம் அருகில் அமைந்துள்ள தெப்பக்குளம் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக மிகவும் சுகாதார சீர்கேட்டுடன் நோய் பரப்பும் மையமாக திகழ்ந்து வருகிறது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில், பிரசித்திபெற்ற சவுந்தரவல்லி அம்பாள் உடனுறை சோமேஸ்வரர் மற்றும் லட்சுமி நாராயண பெருமாள் கோவில்கள் அமைந்துள்ளன.
சேந்தமங்கலம் சிவாலயம் அருகில் அமைந்துள்ள தெப்பக்குளம் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக மிகவும் சுகாதார சீர்கேட்டுடன் நோய் பரப்பும் மையமாக திகழ்ந்து வருகிறது. மேலும் இது பொதுமக்களுக்கு பாதுகாப்பற்ற முறையில் அமைந்துள்ளது.
உப திருக்கோவில்களின் முதன்மையான உற்சவமாகிய மாசி மக திருத்தேர் விழாவின்போது, மாசி பவுர்ணமி அன்று சிவபெருமான் திருமண வைபவம் முடிந்தவுடன், குதிரை வாகனத்தில் சிவபெருமான் மற்றும் வரதராஜ பெருமாள் ஆகிய தெய்வங்கள் இந்த தெப்பக்குளம் அருகே எழுந்தருளி சிறப்பான வாண வேடிக்கை நடப்பது வழக்கமான ஒன்றாகும்.
தெப்பக்குளத்தில் நேரடியாக பெரிய கழிவுநீர் கால்வாய் இணைக்கப்பட்டு பெருமளவில் கழிவுநீர் கலக்கப்பட்டு வருவதால், கோவிலின் தெப்பக்குளம் மிகவும் பாழ்பட்டு உள்ளது.
கோவிலின் தெப்பக்குளத்தில் கழிவுநீர் கலப்பதோடு இல்லாமல், பெருமளவு கழிவு பொருட்களும், குப்பை கூளங்களும் சேர்ந்து கழிவுநீர் தொடர்ந்து தேக்கப்பட்டு வருவதால், இந்தப் பகுதியை சுற்றிலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, நிலத்தடி நீரின் தன்மையும் மாசுபட்டு வருகிறது.
வருங்காலங்களில் விவசாயத்திற்கும் மற்றும் கால்நடை வளர்ப்புக்கும் தகுதியற்ற நீராக மாறுவதற்கான அபாயமும் உருவாகியுள்ளது. எனவே இப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, தமிழக அரசின் இந்து சமய ஆட்சி துறையின் மூலம், மிகவும் சீர்கெட்டு கழிவு நீரால் நிரம்பி உள்ள, சேந்தமங்கலம் சிவாலய தெப்பக்குளத்தை தூய்மைப்படுத்தி விரைந்து சீரமைக்க அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் முன்னாள் செயலாளர் டாக்டர் பாலாஜி, தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிற்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளார்.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
- தற்போது பூங்காவில் முட்புதர்கள் வளர்ந்து காடுபோல் உள்ளது.
- பெரும்பாலான விளை யாட்டு உபகரணங்கள் சேதமடைந்துள்ளது.
ஊத்தங்கரை,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை காந்திநகர் துவக்கப்பள்ளி அருகே, அம்மா சிறுவர் பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டுள்ளது.
தொடக்கத்தில் பயன்பாட்டில் இருந்து வந்த சிறுவர் பூங்கா, நாளடைவில் முறையான பராமரிப்பு இன்றி, போதிய பாதுகாப்பு வசதி இல்லாத காரணத்தால், பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
தற்போது பூங்காவில் முட்புதர்கள் வளர்ந்து காடுபோல் உள்ளது.
பெரும்பாலான விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்துள்ளது. பராமரிப்பின்றி இருப்பதால் அப்பகுதி மக்கள் அவதிபட்டு வருகின்றனர்.
சேதமடைந்து கிடக்கும் பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடத்தை உடனடியாக சீரமைத்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- வெள்ளாற்றில் ரூ.15.77 கோடியில் கட்டப் பட்ட தடுப்பணையால் 4.14 மில்லியன் கனஅடி நீரைச் சேமிக்க முடியும்.
- மழைக் காலங்களில் சேதம் அடைந்து கரைப்பகுதியில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கூடலூர் கிராமத்தில் வெள்ளாற்றின் குறுக்கே தடுப்பணை உள்ளது. அரியலூர் மாவட் டத்தை இணைக்கும் இந்த தடுப்பணை வெள்ளாற்றில் ரூ.15.77 கோடியில் கட்டப் பட்ட தடுப்பணையால் 4.14 மில்லியன் கனஅடி நீரைச் சேமிக்க முடியும். இந்த தடுப்பணையை ஒட்டியுள்ள வெள்ளாற்றங்கரை மழைக் காலங்களில் சேதம் அடைந்து கரைப்பகுதியில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டது.
இதனால் வெள்ளாற்றங் கரை பகுதி வழியாக விவசாயிகள், பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. மேலும் கரையின் ஓரம் சீமை கரு வேல மரங்கள் அதிக அள வில் உள்ளதால் விவசாயி கள், பொதுமக்கள் கரையில் நடந்து செல்லும்போது பெரும் சிரமத்திற்கு ஆளாகி யுள்ளனர். எனவே பொதுப்பணித்துறையினர் கரையோரம் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றி மழையால் சேதமடைந்துள்ள வெள்ளாற்றங்கரையை சீரமைக்க வேண்டும். மேலும் சேதம் அடைந்துள்ள கரையை சீரமைக்க வேண்டும் என விவசாயி கள், பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- சோழவந்தான் அருகே பொது கழிப்பறை கட்டிடம் புதர்மண்டி பாழடைந்து காணப்படுகிறது.
- சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
சோழவந்தான்
சோழவந்தான் அருகே காடுபட்டி கிராமத்தில் உள்ள ஜல்லிக்கட்டு தெருவில் வயலோர பகுதியில் கடந்த 2012 -ம் ஆண்டு ஒருங்கிணைந்த பொது கழிப்பறை கட்டிடம் கட்டப்பட்டது.
அப்போது தண்ணீர் மற்றும் மின் வசதிகள் இருந்ததால் பொதுமக்கள் பயன்படுத்தினர். நாளடைவில் மேற்கண்ட வசதிகள் இல்லாததால் பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டது. அரசும் கண்டுகொள்ளவில்லை.
இதன் காரணமாக பொது கழிப்பறை கட்டிடம் முறையான பராமரிப்பின்றி செடிகொடிகள் வளர்ந்து அடர்ந்த புதராக மாறியுள்ளது. இதனால் அங்கு விஷ பூச்சிகள் அதிகரித்துள்ளன
. மேலும் கொசு உற்பத்தி மையமாகவும் அந்த கட்டிடம் மாறியுள்ளது. இதன் காரணமாக அந்தப்பகுதி பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து அந்தப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-
ஆரம்ப காலத்தில் இந்த கழிப்பறை கட்டிடத்தை பெண்கள் பயன்படுத்தி வந்தனர். தண்ணீர் வசதி இல்லாமல் 5 ஆண்டுகளுக்கு மேலாக பூட்டிய நிலையில் உள்ளது. மேலும் இங்கு பாம்பு மற்றும் விஷ ஜந்துக்கள் இருப்பதால் அருகில் வசிக்கும் பொதுமக்கள் அச்சத்துடனேயே உள்ளனர்.
எனவே இந்த கட்டிடத்தை சீரமைத்து மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- 500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்துவருகின்றனர்.
- இந்த பள்ளியானது கடந்த 2005 ம் ஆண்டு ரூ.4.50 லட்சம் திட்டநிதியில் பொதுமக்களின் பங்களிப்புடன் துவங்கப்பட்டது.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள கரைப்புதூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்துவருகின்றனர். மேலும் இந்த பள்ளியானது கடந்த 2005 ம் ஆண்டு ரூ.4.50 லட்சம் திட்டநிதியில் பொதுமக்களின் பங்களிப்புடன் துவங்கப்பட்டது. இதனையடுத்து கடந்த 2008 ஆம் ஆண்டு ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. தற்போது தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி என இரு பிரிவுகளில் வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன.
தற்போது வகுப்பறை பற்றாக்குறையால் மாணவர்கள் பாதிபேர் இருக்கையிலும் மீதி பேர் தரையில் அமர்ந்தும் படித்து வருவதாகவும்,பள்ளி கட்டிடத்தின் முன்புறத்தில் ஒரு கட்டிடத்தின் முகப்பு இடிபாடுகளுடன் காணப்படுவதால் மாணவர்கள் அச்சத்துடன் பள்ளிக்கு வந்து செல்வதாகவும் பெற்றோர்கள் கவலையுடன் தெரிவித்தனர். மேலும் சத்துணவு திட்டத்தில் வழங்கப்படும் அரிசி தரமற்றதாக உள்ளதாகவும் இது குறித்து பலமுறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கையில்லை என்றும், எனவே மாவட்ட நிர்வாகமும், பள்ளி கல்வித்துறையும் உடனடி நடவடிக்கை எடுத்து பள்ளி கட்டிடத்தை பராமரித்தும்,சத்துணவு திட்டத்திற்கு தரமான அரிசி வழங்கவேண்டும். இவ்வாறு கரைப்புதூர் பொதுமக்கள் தெரிவித்தனர்.
- சேதமடைந்த அங்கன்வாடி மையத்தை சீரமைக்க கோரி கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
- சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் நகர பகுதி சபை கூட்டம் நடைபெற்றது.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் நகர பகுதி சபை கூட்டம் நடைபெற்றது. 1-வது வார்டில் நடைபெற்ற நகர பகுதி சபை கூட்டத்திற்கு சிங்கம்புணரி நகர் சேர்மனும் 1-வது வார்டு உறுப்பினருமான அம்பலமுத்து தலைமை தாங்கினார். செயல் அதிகாரி ஜான் முகமது முன்னிலை வகித்தார். இதில் 1-வது வார்டு பொதுமக்கள் திரளான அளவில் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பொது மக்களின் குறைகள் கேட்டறியப்பட்டு அதற்கான தீர்வுகள் செய்து தருவதாக சேர்மன் அம்பலமுத்து உறுதியளித்தார். அதை தொடர்ந்து அந்த வார்டு பொதுமக்கள் கூறுகையில், அங்கன்வாடி மையம் சமுதாய கூடத்தில் செயல்பட்டு வருகிறது. அந்த சமுதாயக்கூடமும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. மின்சார வசதி கிடையாது. ஆகவே சமுதாய கூடத்தை சிறந்த முறையில் பராமரிப்பு செய்து மின் இணைப்பு வழங்க வேண்டும். அப்போது பேரூராட்சி சேர்மன் அம்பலமுத்து அங்கன்வாடி மையம் உடனடியாக சரி செய்யப்படும் என உறுதியளித்தார்.
- குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
- 40 வருடங்களாக சாலை வசதி இல்லாமல் உள்ளது
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி கண்டியன் தெரு பகுதியில் குண்டும் குழியுமான சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் வருவாய்த்துறையிடம் மனு அளித்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி கண்டியன் தெரு பகுதியில் 40 வருடங்களாக சாலை வசதி இல்லாமல் குண்டும் குழியுமான சாலை யால் மழைநீர் தேங்கி செல்வதற்கு வழி இல்லாமல் அப்பகுதி பொது மக்கள் அவதியுற்று வந்த நிலையில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.கண்டியன் தெரு பகுதியில் 5 இடங்களில் பேவர் பி ளாக் சாலை அமைக்கப்பட்டது. கண்டியன் தெரு அருணாச்சலம் இல்லம் முதல் தமிழ்வாணன் என்பவரது இல்லம் வரை தனி நபர் ஆக்ரமிப்பால், பேவர் பிளாக் சாலை அமைக்க அளவீடு செய்ய வில்லை.
எனவே அதனை முறையாக அளவீடு செய்து சாலை அமைக்குமாறு கறம்பக்குடி பேரூராட்சி மற்றும் வருவாய் துறையினரிடம் ஊர் பொதுமக்கள் சார்பாக ஊர்கமிட்டி தலைவர் ஞானச்சந்திரனிடம் மனு அளித்தனர்.
மனுவை பரிசீலனை செய்த அன்றைய வட்டாட்சியர் விஸ்வநாதன் பேரூராட்ச்சிக்குட்பட்ட சாலை என்பதால் மனுவை பேரூராட்சி செயல் அலுவலர் கார்திக்கேயனுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்ககோரி கடிதம் அனுப்பினார். ஆனால் இன்று வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலையை சீரமைக்காத, பேரூராட்சி நிர்வாக அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோ ரியும். தங்களுக்கு முறையான அளவீடு செய்து தனிநபர் ஆக்கிரமிப்பை அகற்றி சாலை அமைத்து தருமாறு அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர் தாந்தோன்றிமலை பகுதியில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இங்கு கரூர் கலெக்டர் அலுவலகம், கோர்ட்டு, தாலுகா அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் வேலை பார்க்கும் அரசு ஊழியர்கள் உள்ளிட்டோர் ஒரு குறிப்பிட்ட தொகையை மாத வாடகையாக செலுத்தி குடியிருந்து வருகின்றனர்.
இங்குள்ள அடுக்குமாடி கட்டிடங்கள் நீண்ட நாட்களாக பராமரிக்கப்படாததால் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து இடியும் நிலையில் உள்ளன. மேலும் கட்டிடத்தின் கம்பிகள் வெளியே தெரியும் படி இருக்கின்றன. இதனால் பாதுகாப்பு கருதி 30-க்கும் மேற்பட்டோர் வீடுகளை காலிசெய்துவிட்டனர். காலி செய்யப்பட்ட கட்டிடங்களில் பழைய மரசாமான்கள் உள்ளிட்டவைகளை போட்டு வைக்கப் பட்டுள்ளது.
மேலும் இந்த குடியிருப்பு வளாகத்தில் சிறுவர், சிறுமியர் உள்ளிட்டோர் விளையாடுவதற்காக அமைக்கபட்ட பூங்காவில் வேண்டாத செடிகள் முளைத்து பூங்கா பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இங்கிருந்து விஷ ஜந்துகள் அடிக்கடி வருவதால் குடியிருப்புவாசிகள் அச்சமடைந்து வருகின்றனர். எனவே தாந்தோன்றிமலையில் உள்ள வீட்டுவசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்புகளை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும். அங்குள்ள பூங்காவை பராமரித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஊத்துக்கோட்டை அருகே உள்ள சிற்றபாக்கம் பகுதியில் 1983-ம் ஆண்டு ஆரணி ஆற்றின் குறுக்கே 480 மீட்டர் தூரத்துக்கு தடுப்பு அணை கட்டப்பட்டது. 10 அடி உயரம் கொண்ட இந்த அணையில் சேமித்து வைக்கும் தண்ணீரை தேவைப்படும்போது கிருஷ்ணா நதி கால்வாய் மூலம் பூண்டி ஏரிக்கு திறந்து விடுவது வழக்கம்.
வெள்ளம் ஏற்பட்டால் உபரிநீர் ஆரணி ஆற்றில் பாய்ந்து செல்லும். உபரி நீர் தானாக ஆற்றில் பாய்வதால் தடுப்பு அணைக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்க 480 மீட்டர் தூரத்துக்கு கரைகள் அமைக்கப்பட்டது.
கடந்த 2015-ம் ஆண்டு பெய்த பேய் மழைக்கு ஆரணி ஆற்றில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டது. இதில் தடுப்பு அணைக்கு ஒட்டி அமைக்கப்பட்ட கரைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.
இதையடுத்து 2016-ம் ஆண்டு ரூ.1 கோடி செலவில் பெரிய பெரிய பாறாங்கற்களை கொண்டு கரைகள் சீரமைக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் பெய்த பலத்த மழைக்கு ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தடுப்பு அணை முழுவதுமாக நிரம்பியது. இதனால் உபரி நீர் ஆரணி ஆற்றில் பாய்ந்தது.
தண்ணீர் கரை புரண்டு ஓடியதால் தடுப்பு அணைக்கு ஒட்டி உள்ள கரைகள் மீண்டும் சேதமடைந்து உள்ளன. இது இன்னும் சரி செய்யப்படாமல் உள்ளது.
கோடை வெயில் காரணமாக தடுப்பு அணை தற்போது முழுவதும் வறண்டு காணப்படுகிறது. எனவே இப்போது கரைகளை சீர்செய்யும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்